சின்மயி-வைரமுத்து பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினியின் மனைவி!

கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி கூறினார். இதனையடுத்து பாடகி சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பேசிவந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“மீ டூ” விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது என கூறினார்.

ஒரு சூப்பர்ஸ்டாரின் மனைவி இவ்வாறு கூறியதால், அரசியல் நோக்கில் இவர் பதில் கூறாமல் சென்றுவிட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இசைஞானி இளையராஜா அவர்களும், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார், அப்போது அவரிடமும் “மீ டூ” விவகாரம் குறித்து கேட்கப்பட்டது, அப்பொழுது அவரும் வேறு கேள்வி இருந்தால் கேளுங்கள் என கூறிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது