டெல்லியில் 8 வயது சிறுவன் இளைஞர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மால்வியா நகரில் முகமது அசீம் என்ற எட்டு வயது மாணவன் தங்கி படித்து வந்துள்ளான். சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் அசீம் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே தக்காற்று ஏற்பட்டுள்ளது.
அந்த தகராறில் ஏற்பட்ட மோதலில், இளைஞர்கள் அசீமை தாக்கியுள்ளனர் அதில், படுகாயமடைந்த முகமது அசீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், பள்ளி அருகே பள்ளி மாணவர்களும் அப்பகுதியை சேர்ந்த மற்ற இளைஞர்களும் அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர்.
அப்பொழுதுதான் இரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் மீது தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் முகமது அசீம் பலமாக காயமடைந்து கீழே விழுந்து இறந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.