தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள் மீண்டும் போட்டியிட எந்த தடையும் இல்லை என்று அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் அணி முடிவு செய்துள்ளனர். தகுதிநீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியான நிலையில் இன்று தினகரன் அணி அடுத்ததிட்டம் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, 18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதத்தை கேட்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் மீண்டும் போட்டியிட முடியாதா என்ற சந்தேக எழுந்த நிலையில், அவர்கள் மீண்டும் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த விடயத்தில், இந்திய அரசியல் சாசனத்தின் 191(1) பிரிவின் படி – இந்திய குடிமகன் இல்லாதவர்கள், ஆதாய பதவிகள் வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தொடரவோ, மீண்டும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படவோ முடியாது.
ஆனால், 191(2)ம் பிரிவின், 10வது அட்டவணையின் கீழ் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எம்எல்ஏ-க்கள் அந்த பதவியில் தொடர முடியாது. அதே சமயத்தில், அவர்கள் மீண்டும் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்படவோ, போட்டியிடவோ முடியாது என்றோ இந்த பிரிவில் எந்த தடையையும் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.