கின்னஸ் சாதனை படைத்து புகழின் உச்சிக்கு சென்ற தமிழருக்கு நேர்ந்த அவலம், கதறும் காதல் மனைவி.!

திருப்பூரில் தனது நகத்தால் 20 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட பொருளை தூக்கி கின்னஸ் சாதனை படைத்த ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ஹேமச்சந்திரன்.27 வயது நிறைந்த அவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது விரல் நகத்தில் துளையிட்டு, 22.5 கிலோ எடையுள்ள பொருளைத் தூக்கிக் சாதனை படைத்தார்.

மேலும் இவரது இந்த அரிய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.

இதையடுத்து பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஹேமச்சந்திரன் பல சாதனைகள் மேற்கொண்டு அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹேமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கடன் தொல்லையால்தான் ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.