கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வட மாகான முதலமைச்சர் பதவியில் இருந்து விடைபெற்ற, விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் முன்னணி என்னும் புதிய கட்சியை ஆரம்பித்து. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அத்தோடு அவர் நேற்றைய தினம் ஆற்றிய உரை சிங்கள தேசத்தையும் கதி கலங்க வைத்துள்ளது. இந்திய சாக்கடை அரசியலை பின் பற்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பு வட கிழக்கில் நாடகமாடி வருகிறது. பதவிகளை பெற்றுக்கொண்டு , தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் பெற்றுத் தராமல். சிங்கள அரசுக்கு கைக்கூலியாக மாறியுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
இன் நிலையில் தாம் முன் நாள் வட மாகாண முதலமைச்சர் ஐயா, விக்கினேஸ்வரன் அவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதோடு. இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும், தமிழர்களுக்கு சுயாட்சி வேண்டும் என்ற பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஐயா விக்கி அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள். வெளிநாடுகளில் நாம் சொல்வதை, சிங்களவர்களின் குகைக்குள் இருந்துகொண்டே ஐயா விக்கி அவர்கள் கூறியுள்ளமை, அவரது நேர்மையையும் துணிவையும் எடுத்துக் காட்டுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு மாற்றுக் கட்சியாக, தமிழ் தேசியத்திற்கு ஒரு எழுச்சியாக ஐயா விக்கி அவர்களின் கட்சி உருப்பெற்றுள்ளது. எனவே ஈழத் தமிழர்கள் அனைவரும் இணைந்து அவரது கட்சியை பலப்படுத்தவேண்டும். பலமான , திடமான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்கினால். அதனூடாக நாம் சர்வதேசத்தை அணுகி நடந்த கொடுமைகளுக்கு நீதி கேட்க்க முடியும். சுமந்திரன், சம்பந்தன், மற்றும் மாவை போன்றவர்கள் ஐ.நா சென்று பூசி மொழுகியது போதும். சிங்களத்திற்கு வால் பிடித்த கதை இனியாவது முடியட்டும். தமிழ் இனம் ஐயா விக்கி அவர்கள் பின்னால் ஒன்று திரளவேண்டும் என்று தமிழ் புத்திஜீவிகளும் , செயல்பாட்டாளர்களும் கருத்துவெளியிட்டுள்ளமை வரவேற்க்கத்தக்க விடையம். ஆகும்.