உத்திரப்பிரேதசம் மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் வசித்து வருபவர் லக்ஷ்மான். இவரின் மனைவியின் பெயர் லதா (இருவரது பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில்., கணவர் மனைவியின் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கணவரின் வீட்டில் உள்ளவர்களும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில்., இவரின் நடத்தையில் நம்பிக்கையில்லாமல் தனது மனைவியை பஞ்சாயத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இவரின் மனைவி தன்னை தாம் உண்மையானவள் என்று பலமுறைகூறியும் பஞ்சாயத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த பஞ்சாயத்தில் இருந்த மந்திரவாதி ஒருவன் நெருப்பை எரியவிட்டு அந்த நெருப்பில் கைவைக்கும் பெண்களுக்கு., நெருப்பின் தாக்கம் தெரியவில்லை என்றால் அவர்கள் உண்மையானவர்கள் என்று `கூறியுள்ளார்.
இதனை ஏற்ற அந்த பெண்ணும்., அவரின் கணவனும் நெருப்பில் கைவைக்க தயாராகி., முதலில் கணவன் சிறிது நேரம் தனது கைகளை வைத்துவிட்டு எடுத்துள்ளான். பின்னர் அந்த பெண்ணை நெருப்பில் கைவைக்க கூறியுள்ளனர்.
அந்த பெண்ணும் நெருப்பின் மீது கைவைத்துள்ளார்., அந்த பெண்ணின் கையை அவரின் கணவன் நெருப்பில் நன்றாக படும்படி அழுத்தி பிடித்ததுமில்லாமல்., அவரை கணவன் குடும்பத்தினர் எங்கும் அசையாத வண்ணம் பிடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அவரின் கைகள் நெருப்பின் தாக்கத்தால் வெந்தன. இந்த சம்பவம் குறித்த புகைப்படமானது இணையதளங்களில் வைரலாகவே காவல் துறையினர் தாமாக முன்வந்து அந்த பெண்ணின் அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.