சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள யுடாங் நியூ செஞ்சூரி மழலையர் பள்ளியில் இன்று காலை குழந்தைகள் தங்கள் வழக்கமான பயிற்சி முடிந்து வகுப்புகளுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த 39 வயதுடைய ஒரு பெண், தான் கொண்டு வந்த கத்தியால் குழந்தைகளை சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளார்.
இதனால் குழந்தைகளின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. வெறித்தனமாக குழந்தைகளை தாக்குவதைப் பார்த்த பாதுகாவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்துள்ளனர். பின்னர் அவர் காவல் துறையில் ஒப்படித்துள்ளனர்.
இந்த திடீர் தாக்குதலில் 14 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிக்சை அளித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, பள்ளிக்கு வந்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாக, தகவல் பரவி வருகிறது.