2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இருமடங்காகும்.!

லக்னோவில் நடக்கும் கிரஷ் கும்பமேளாவை முன்னிட்டு பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வழியாக பேசினார். விவசாயிகளை யாரும் வழிநடத்தி செல்ல இயலாது. ஆனால் விவசாயிகள் நாட்டை வழிநடத்தி செல்ல முடியும். நாடு முழுவதும் 16 கோடி விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில், உத்திரப்பிரதேச மாநில அரசு கணிசமாக உயர்த்தி இருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு செலவினங்களைக் குறைக்கவும் லாபத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் சூரிய மின்சக்தி குழாய்கள் நிறுவப்படும்.

பசுமைப் புரட்சிக்குப் பிறகு, இப்போது தேன் உற்பத்தி, பால் உற்பத்தி, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.