இலங்கை பிரதமர் ரணில் விக்கரம சிங் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இந்திய ஊடகங்களிலும், இலங்கை ஊடகங்களிலும் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
பிரதமர் மீது ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்தார். அப்போது அவர் திட்டம் நிறைவேறவில்லை.
தற்போது ரணில் ஒரு கட்சியிலும், இலங்கை அதிபர் ஒரு கட்சியிலும் அங்கம் வகிக்கின்றனர். இரு கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வந்தது.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகள் கூட்டணியில் சமீபத்தில் ஏற்பட்ட பிளவு பிரதமர் ரணில் பதவி நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
ராஜபக்ச இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு தான் இலங்கையில் விடுதலை புலிகள் மீதான தாக்குதல் அதிகமாகி, கடந்த 2009 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில், உலகமே அதிரும் வகையிலான ஒரு இனஅழிப்பு சம்பவம் இடம்பெற்றது.
சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியாளராக ராஜபக்சா பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவர் பிரதமராக பதவியேற்றுள்ளது ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.