வீட்டில் தூங்கி கொண்டிருந்த 100 வயது மூதாட்டியை 20 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் நடியா மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் ஒரு வீட்டில் 100 வயதான மூதாட்டி தனியாக தூங்கி கொண்டிருந்தார்.அப்போது வீட்டுக்குள் நுழைந்த அர்கா பிஸ்வாஸ் என்ற 20 வயது இளைஞர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த பாட்டி சத்தம் போட்ட நிலையில் அந்த இளைஞன் பாட்டி படுத்திருந்த மெத்தைக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.பின்னர் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த மூதாட்டியின் உறவினர்கள் அர்காவை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அர்காவை கைது செய்தனர். பின்னர் நான் மது போதையில் இருந்தேன், நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை என போலீசாரிடம் அர்கா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.