அரசாங்கத்தின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையான இலங்கை ரூபவாயினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் தலையீட்டின் அடிப்படையில் இவ்வாறு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சில குற்றம் சுமத்தியுள்ளன.
எனினும், அரசாங்க ஊடகங்களில் சட்ட ரீதியாக பணியாற்றுவோரை சட்டவிரோத கும்பல் ஒன்று தாக்கியதாக பீதியை ஏற்படுத்தியுள்ளதாக மங்கள சமரவீர சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் காணப்பட்ட அச்சம் பீதியுடன் கலந்த யுகத்தை மீளவும் கொண்டு வருவதற்கு சில தரப்பினர் முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.