இந்தியாவிற்கும் ஈரானுக்கும் நாள் குறிக்கும் அமெரிக்கா., முழு விபரம்.!

அமெரிக்கா நாட்டின் அதிபரான டிரம்ப் அவர் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற காலத்தில் இருந்து அனைத்து நாடுகளுக்கும் உள்ள பிரச்னையை மையப்படுத்தி சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பொருளாதாரத்தடை விதித்து வருகிறார்.

அந்த வகையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா சீனாவின் மீது அதிரடியாக பொருளாதார தடையை விதித்து அறிவித்தது.

இந்த சம்பவமானது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் சீனாவுடன் பொருளாதாரம் மேற்கொண்டு வரும் அனைத்து நாடுகளும் சீன நாட்டினுடனான பொருளாதாரத்தை நீக்கவில்லை என்றால் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அந்த வகையில் கடந்த 2015 ம் வருடத்தில் நடத்தப்பட்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா., இங்கிலாந்து., ரசியா., பிரான்ஸ்., சீனா மற்றும் ஜெர்மனி., ஈரான் ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தை ஈரான் நாடானது மீறியதாக அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்து., ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது விலக்கப்பட்ட பொருளாதார அனைத்தும் அதிரடியாக மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தது.

அந்த வகையில் ஈரான் நாடுகளில் இருந்து பிறநாடுகள் எண்ணையை இறக்குமதி செய்தால் அந்த நாடுகளுக்கும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் பொருளாதார தடையானது அறிவிக்கப்படும் என்று அறிவித்தது.

இதனால் ஈரான் நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்திய குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் வெள்ளைமாளிகையில் அதிபர் டிரம்ப் ஈரான் மீதான பொருளாதார நவம்பர் மாதம் 5 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தது.