கர்நாடகா மாநிலத்தில் நடக்கும் இடைத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். ‘‘நான் கடவுள் அருளால் முதலமைச்சர் ஆகி
இருக்கிறேன். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.
ஆனால் சிலர் எனது நிர்வாகம் மீது வீணாக பழி சுமத்தி பிரசாரம் செய்கின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.
மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் 10 லட்சம் விவசாயிகளுக்கு வருகிற நவம்பரில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏற்கனவே எனது அரசால் மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.500 கோடி கடன் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் கூடுதலாக ரூ.60 கோடி ரத்தும் செய்யப்படும். எனவே எனது பட்ஜெட்டை ‘மாண்டியா பட்ஜெட்’ என பா.ஜனதா தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அவர்கள் தங்கள் கட்சிக்காக இங்கு வாக்கு கேட்க எந்த உரிமையும் கிடையாது. இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது உணர்ச்சி வசப்பட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார். எனது கடைசி மூச்சு உள்ள வரை மக்களுக்கா உழைப்பேன் என்று உறுதி கொடுத்தார். மிகப்பெரிய இருதய ஆபரேசனுக்கு பிறகு மக்களின் ஆசியில் மீண்டும் உயிர் பிழைத்து திரும்பியதாக கூறினார்.