நள்ளிரவில் தூக்கியெறிப்பட்ட அவலம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டது. அணியில் இருந்து முன்னாள் கேப்டன் தோனி நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதைய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக இருப்பவர் தோனி இதுவரை 93 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1487 ரன்களை குவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது முதல் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் தற்போது வீரராக விளையாடிய நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து தோனி விளையாடவில்லை என தேர்வுக்குழு தலைவர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார்.

இதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அழிக்கப்பட்டும் அவருக்கு பதிலாக பொறுப்பு கேப்டனாக ரோஹித் ஷர்மா விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.