பிரதமர் பதவியை ஏற்று முழுதாக ஒருநாள் கூட முடியாத நிலையில் இலங்கையில் திருத்தி அமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதியை விட பிரதமருக்கே அதிக அதிகாரம் இருப்பதாக பேட்டி ஒன்றில் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.எனவே வெகுவிரைவில் மைத்திரி ஆட்சியை ராஜபக்சே கவிழ்ப்பார் என்று கூறப்படுகிறது.
இலங்கையின் முக்கிய முடிவுகளை ராஜபக்சேவே எடுப்பார் என்றும் கூறப்படுவதால் இலங்கை மக்கள் குறிப்பாக இலங்கை தமிழர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.