தமிழ்த்திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் லைலா. இவர் பார்த்தேன் ரசித்தேன்., தீனா மற்றும் தில் திரைப்படத்தில் தனது குழந்தை முகத்தை வைத்து தமிழகத்தின் இளைஞர்களை கவிழ்த்த நடிகையான இவர்., திருமணம் முடிந்த பின்னர் சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் வேலையில் இவர் கூறியதாவது.,
திரைத்துறையில் தற்போதும் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தாலும்., எனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் ஏதும் வரவில்லை., அதனால் தான் நடிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருந்து தற்போதும் திரைப்படத்திற்கு நடிக்க அழைப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது.
நான் நடிக்கும் கதாபாத்திரம் வில்லன்., காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும்., அவையனைத்தும் மக்களின் மனதில் நல்ல எண்ணங்களையும்., யாரையும் புண்படுத்தாத வகையில் இருந்தால் அது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவும்., அந்த கதாபாத்திரத்திற்க்காக தற்போது வரை காத்திருக்கிறேன்.
எனக்கு இயக்குநராகவேண்டும் என்ற ஆசையும் உள்ளது., ஏனெனில் சுற்றுப்புறத்தில் நடக்கும் ஏதேனும் ஒரு முக்கியமான விசயமானது என்னை ஈர்க்கும் பட்சத்தில் நான் அந்த கதையை இயக்குவேன்.
தமிழ் சினிமாத்துறையானது தற்போது ஆரோக்கியமாக தனது பயணத்தை தொடர்ந்துவருகிறது. பெண்களில் பிரச்சனைகளையும் அவர்களின் எதிர்காலத்தின் கடமைகள் பற்றியும்., பெண்களை மையப்படுத்தி தற்போது அதிகளவில் திரைப்படங்கள் வருவதை காணும் பொது மகிழ்வாக உள்ளது.
மேலும் தற்போது வரும் செய்திகளில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலேயே பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது போன்ற செயல்கள் மிகவும் கீழ்தரமானது.
இரண்டு குழந்தைக்கு தாயக இருக்கும் நான்., எனது பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் கொண்டு அவர்களை நானே கவனித்து வருகிறேன். மேலும் ஒரு தாயின் கடமையை எனது பிள்ளைகளுக்கு சரியாக செய்து வருவதில் மிகவும் மகிழ்ச்சியோடு உள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்ப்படங்களில் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கும் பட்சத்தில் நான் கண்டிப்பாக மீண்டும் திரையில் தோன்றுவேன்… தல ஸ்டைல் ல சொல்லணும்ன்னா திரும்பி வரேம்மா……