ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்மைப்பின் நாடாளுமன்ற குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇன்று இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினத்திற்குள் சில அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ள புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நியமனமாக இது இருப்பதற்கு பெருமளவு வாய்ப்புக்கள் நிலவுவதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.