மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியமான சுகாதார உணவை சாப்பிடுவதை வலியுறுத்தி இந்திய அளவிலான சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை வந்து, கன்னியாகுமரி வழியாக சிவகாசி வந்தடைந்தது.
இந்த பேரணிக்கு, மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகாசியில் பேரணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கிவைத்தார்.
ஸ்வஸ்த் யாத்திரை என்ற பெயரில் நடைபெறும் இந்த பேரணியில், ஆரோக்கியமாக வாழ சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த சைக்கிள் பேரணி பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்து அடுத்த வருடம் ஜனவரி 26-ந் தேதி டெல்லி சென்றடைய இருக்கிறது.
சுகாதாரமான வாழ்கை வாழ்வதற்கு, சிறிது சிறிதாக வாழ்கை முறையில் மாற்றம் செய்ய வேண்டும். சுகாதாரமான வாழ்கை என்பது, சரியான உடற்பயிற்சி, சரிவிகித உணவு முறைகள் ஆகியவற்றை தினமும் சரியாக கடைபிடிக்க வேண்டும். தினசரி யோகா செய்ய வேண்டும். நான் 25 வருடங்களாக யோகா செய்து வருகிறேன். இன்றைய தலைமுறையினர் யோகா செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதனால் ஆயுள் அதிகரிக்கும்.