அலரிமாளிகையில் வெளிநாட்டுத் தூதர்கள்! அடுத்தது என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தற்பொழுது விசேட கூட்டமொன்றை நடத்திவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வெளி நாடுகளின் தூதரகத் தூதுவர்கள் மற்றும் முக்கியமான ஆணையாளர்களுடன் இந்த உயர்மட்டச் சந்திப்பு இடம்பெற்றுவருவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

பிரதமராக முன்னாள் ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுதும் தானே நாட்டின் பிரதமர் எனவும் மஹிந்தவின் நியமனம் நாட்டின் அரசமைப்பிற்கு முரணானது எனவும் ரணில் கூறிவருவதுடன் தொடர்ந்தும் அலரி மாளிகையிலேயே தங்கியுள்ளார்.

எவ்வாறாயினும் ரணில் கூடிய விரைவில் அலரிமாளிகையை விட்டு வெளியேறி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழிவிட்டுக் கொடுக்கவேண்டும் என மஹிந்த தரப்பினர் கூறிவருகின்றனர்.

பாராளுமன்றத்தை விரைவில் கூட்டவேண்டும் என்ற அவரது கோரிக்கையும் ஜனாதிபதியால் மறுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மாதம் 16ஆம் நாள்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க உயர்மட்ட கலந்தாலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.