மனைவி பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக, தனது 6 வயது மகளை துடிதுடிக்க தந்தை செய்த செயல், வெளியான சம்பவத்தால் அதிர்ச்சி.!

மனைவி பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டநிலையில், தனது 6 வயது மகளை பெற்ற தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அஞ்சும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல இடங்களில் பெற்றோர்களே தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பாதுகாப்பாய் இல்லாமல் பாலியல் வன்கொடுமைகள் செய்வது மிகவும் கொடூரமாகும்.

மத்திய பிரதேசம், கட்னி மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அந்த நபரின் மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அதனால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இந்நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது குழந்தைகளையும் தான் பார்த்துக்கொள்வதாக கூறி அவரது சகோதரி அழைத்து சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் அந்த நபர் தனது மனைவியை பார்க்க சென்றபோது நம் மகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி, 6 வயது மகளை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அந்த கொடூர நபர் தான் பெற்ற பிள்ளை என்று கூட பாராமல் தனது 6 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த கொடூர கொடூர தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.