உலக அழகி போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியின் உச்சத்தில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2018 ஆம் ஆண்டின் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் உலக அழகி போட்டி மியான்மர் நாட்டில் நடைபெற்றது .
இதில் இந்தியா உட்பட உலகின் பல நாட்டு அழகிகள் பங்கு பெற்றனர். இந்நிலையில் நேற்று நடந்த இறுதி போட்டிக்கு 0 இந்திய அழகி மீனாட்சி சவுத்ரி மற்றும் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா ஆகியோர் தகுதி பெற்றனர்.மேலும் இறுதிபோட்டியில் உலக அழகியாக பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியில் வெற்றியாளர் என தனது பெயரை அறிவித்ததும் கேட்டதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற கிளாரா திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர்
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
உலக அழகியாக முடிசூட்டப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய கிளாரா, தான் முதல் பணியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சந்தித்து, அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.