ஆயிரம் பேருக்கு அன்னதானம் போட்டு என்ன பயன்..? அழுகிய நிலையில் மீட்கப்பட்ட முது தம்பதியினர்??

குமரி மாவட்டம், தக்கலையை அடுத்த சாரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லம் வயது 85. இவரது மனைவி ஞானம்மா வயது 78.

இவர்கள் இருவரும் சாரோடு பகுதியில் சானல் அருகேபொறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தனர்.

கூலி வேலை செய்து வந்த செல்லம், வயதுமுதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாகவேலைக்கு செல்லவில்லை.

இருப்பினும், அன்றாட உணவுக்கு கோவிலில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு வந்ததாககூறப்படுகிறது.

இந்த நிலையில், தம்பதியர் இருவரும் கடந்தசில நாள்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்கள் வசித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தக்கலை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், வீட்டினுள் சென்றுபார்த்தபோது, செல்லமும், ஞானம்மாவும் அழுகிய நிலையில் உடல் சிதைந்து பிணமாக கிடந்தனர்.

வறுமையால், வீட்டிலேயே தம்பதியர் இருவரும் பட்டினியால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்து.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துதொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த தம்பதியருக்கு பிறந்த 3 மகன்களில் ஒருவர் இறந்துவிட்டார். மற்ற மகன்களான பொன்னுசாமி, பொன்னப்பன் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.