தமிழில் உள்ளம் கேட்குமே, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி, கஜினி காவலன் உள்பட பல படங்களில் நடித்தவர் அசின். முன்னணி நடிகர்களான விஜய், அஜித்குமார், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஹவுஸ்புல்-2 படத்தில் நடித்தபோது அக்ஷய்குமாரின் நண்பரும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் காதல் மலர்ந்தது.
இருவரும் 2016-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு அசின் சினிமாவில் நடிக்கவில்லை.
அவருக்கு கடந்த வருடம் 2017 -ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அரின் என்று பெயர் வைத்தனர். ஆனாலும் குழந்தையின் புகைப்படத்தை வெளிஉலகுக்கு இதுவரை காட்டாமலேயே இருந்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் முதல் பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினார்கள். இதைத்தொடர்ந்து முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை அசின் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகை படத்தினை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.