சில்பாவுடன் இயக்குனர் ஆடிய ஆட்டம்.! வைரலில் வெளியான வீடியோ.!!

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துவரும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்க்கான இசையை யுவன்சங்கர்ராஜா அமைத்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா., ரம்யா கிருஷ்னன்., காயத்ரி மற்றும் இயக்குனர் மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கான திரைக்கதை குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக படக்குழு பாதுகாத்து வரும் நிலையில்., நடிகர் விஜய்சேதுபதி சில்பா கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்பது அனைவரும் அறிந்த விசயமாகும்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் முதல்பார்வையானது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது., இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி தனது கதப்பத்திரம் குறித்த வீடியோ காட்சி பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகளானது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.