முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த அமித்ஷா! அடுத்து நடக்க போகும் மாற்றம்?

பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று கேரள மாநிலத்தின் கண்ணூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியவை, இன்று கேரளாவில் மத நம்பிக்கைகள் மற்றும் மாநில அரசாங்கத்தின் கொடுமை ஆகியவற்றிற்கு இடையே ஒரு போராட்டம் நடைபெறுகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு உடைக்க நினைக்க கூடாது. சபரிமலை பக்கதர்களுக்கும் மற்றும் அவர்கள் நம்பிக்கைக்கும் பாஜக என்றும் துணை நிற்கும்.

இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளது என்பதை, கோர்ட் உத்தரவின்பேரில் சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை தூண்ட நினைத்தவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை. எனவே ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு உடைக்க நினைக்க கூடாது என கூறிக்கொள்கிறேன்.