திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளும் மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிபுரம் என்ற கிராமம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குமார், சுமா என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். குமாரின் மனையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் சுமாக்கு வலது கையில் ஏற்பட்ட வலி காரணமாக மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் வீடு திரும்பினார். வீடு திரும்பிய உடனே சுமாக்கு வலிப்பு வந்துள்ளது. இதையடுத்து அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நேரத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே சுமாவின் உயிரிழப்பிற்கு காரணம் என கூறி பெண்ணின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.