இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படமானது கடந்த 2014 ம் வருடம் உலகளவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இவர்கள் இருவரின் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எந்திரன் 2.0 . இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். வில்லனாக இந்தி திரைப்பட நடிகரான அக்சய் குமார் நடித்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
The FIFTH FORCE is coming! #2Point0Trailer #2Point0TrailerOnNov3 pic.twitter.com/CYhOZ0R47N
— A.R.Rahman (@arrahman) October 28, 2018
இந்திய அளவில் இந்த திரைப்படமானது அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர், நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.