ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

இலங்கையின் சகல தரப்பினரையும் அரசியலமைப்பின் பிரகாரம் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் அவசர கோரிக்கை முன்வைத்துள்ளன.

குறித்த கோரிக்கையினை நாட்டின் சகல அரசியல் கட்சிகளிடமும் மேற்படி தரப்புக்கள் முன்வைத்துள்ளன. இது தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் ஸ்தானிகர் ஆகியோர் வெளியிட்டு மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

மேலும் அரசியல் யாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதுடன் பொது ஸ்தாபனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரத்துக்கு மதிப்பாளிக்குமாறும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் உட்பட பல நாட்டு தூதுவர்கள் நேற்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.