சில உலவுப் பொருட்களின் விலை நாளை அமுலுக்கு வரும்வகையில் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், உணவுப் பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும், தேநீர் ஒன்றின் விலையை 5 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் அசேல சம்பத் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
இதேநேரம், கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் பொதி ஒன்றின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. எனினும், பால் தேநீரின் விலை தற்போதைய நிலையிலேயே காணப்படும்.
இந்த விலைக் குறைப்பை உணவக உரிமையாளர்கள் நடைமுறைப்படுத்துகின்றார்களா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அதனை நடைமுறைப்படுத்தாத உணவக உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அசேல சம்பத் கூறினார்.
இதேவேளை தமது உற்பத்திகளுக்கு விலை குறைப்பு செய்வது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.