ஐஏஎஸ் படிக்க சென்ற தமிழக மாணவி விடுதியில் திடீர் தற்கொலை!

டெல்லியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழக மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் – மகாதேவி தம்பதியினர். இவர்களுடைய மகள் ஸ்ரீமதி, டெல்லியில் உள்ள வஜ்ரா ஐ.எ.ஏஸ் பயிற்சி மையத்தில் கடந்த 6 மாதங்களாக படித்து வந்தார்.

அங்கு தன்னுடைய தோழிகள் சிலருடன் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை 7 மணிக்கு திடீரென ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். இதனையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய டெல்லி பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக ஆர்.எம்.எல் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீமதியின் பெற்றோர் விமானத்தின் மூலம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டனர்.

ஸ்ரீமதியின் இந்த திடீர் தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதற்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களாகவே ஸ்ரீமதி அதிகமான மனஅழுத்ததில் காணப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.