தமிழ் நாட்டில் இனி மணல் தட்டுப்பாட்டை குறைக்க ஆற்று மணலுக்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஜூன் மாதம் அறிவித்திருந்தார். அப்போது பொதுமக்கள் மணலை சுலபமாக பெறுவதற்கு தங்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தையும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை கொண்டுவரப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் எண்ணூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மணலை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த மணலை பெறுவதற்கு முதலில் TNSAND என்ற இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும். பின்னர் விண்ணப்பம் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மணல் விற்பனை செய்யப்படவுள்ளது.
வெளிநாட்டில் இருந்து பெறப்படும் செய்யப்படும் மணலின் அளவானது மாதந்தோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றால், இறக்குமதி செய்யப்படும் மணலின் அளவு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.