இந்தியாவில் 7 வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா. இவர் மனைவி ஆர்த்தி. தம்பதிக்கு தஷி (7) என்ற மகள் உள்ளார்.
சித்தார்த்தா சில மாதங்களுக்கு முன்னர் மாரடைபால் இறந்துவிட்டார். அதிலிருந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார் ஆர்த்தி.
இதையடுத்து தனது வீட்டுக்கு வந்துவிடுமாறு ஆர்த்தியிடம் அவர் தாய் கூறியுள்ளார்.
ஆனால் தனது கணவர் சித்தார்த்தாவின் ஆவி இந்த வீட்டில் இருப்பதால் தன்னால் வர முடியாது என ஆர்த்தி கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆர்த்தி நைட்ரோஜன் கேஸ் சிலிண்டரை வாங்கியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் தனது மகள் தஷி முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடிய ஆர்த்தி அதன் உள்ளே நைட்ரோஜன் கேஸை செலுத்தி தஷியை கொன்றுள்ளார்.
பின்னர் அதே முறையில் தானும் தற்கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றினார்கள்.
இதனிடையில் ஆர்த்தி வீட்டு முன்னால் ஒரு நிலம் சித்தார்த்தா பெயரில் உள்ளது. நிலம் சம்மந்தமாக ஆர்த்திக்கும் அவர் உறவினர்களுக்கும் தகராறு இருந்து வந்தது.
இந்த விடயம் ஆர்த்தியின் அதிர்ச்சி முடிவுக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.