இலங்கை அரசியலில் எதிர்பாரத விதமாக பல மாற்றங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பிரதமரை அலரிமாளிகையிலிருந்து வெளியேற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் மைத்திரி.
இந்நிலையில் சற்றுமுன் அவர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,
அந்த வகையில் ரணிலின் காவலர் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவை பணித்துள்ளார், அலரிமாளிகையில் நீர், மின்சாரம் தொடர்புகளை துண்டித்தல் போன்ற உத்தரவுகளை ஜனாதிபதி மைத்திரி பிறப்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு ஒட்டுமொத்தமாக 800 பேர் கொண்ட பாதுகாப்பு முன்னர் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையால் அலரி மாளிகையே சோகமாயமாக காட்சி அளிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.