கொந்தளிப்பில் கொழும்பு!! இருவர் மரணம்..

தெமட்டகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில் சற்றுமுன் மற்றொரு நபரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – தெமட்டகொடை பகுதியிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் இன்று மாலை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க பெற்றோலிய தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ஏற்பட்ட அமைதியின்மையின் போது கூட்டுத்தாபனத்திற்கு அருகில் அர்ஜீன ரணதுங்கவின் பாதுகாவலர்களர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின்போது.

இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் இன்று இரவு ஒருவர் பலியாகியிருந்தார், இதனையடுத்து நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என ஹேமந்த கமகே இன்று இரவு தெரிவித்திருந்தார்.

தற்போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த 2-வது நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், தெமட்டகொடை பெற்றோலிய தலைமையகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.