சுந்தர பாண்டியன், கொம்பன் போன்ற படங்கள் வந்தபோது, லட்சுமி மேனன் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. ‘குடும்பப் பாங்கான வேடமா; கூப்பிடுங்கள் லட்சுமி மேனனை’ என்று தான் கோலிவூட்டும் கூறியது.
ஆனால் திடீரென, ‘படங்களில் இனி நடிக்கப் போவது இல்லை’ என, அவர் வெளியிட்ட குழப்பமான அறிவிப்பு, அவரது மார்க்கெட்டை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டது.
அதற்கு பின் அவர் நடித்த மிருதன், ரெக்க போன்ற படங்களும் சரியாகப் போகவில்லை. இதனால், சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது, யங் மங் சங் படத்தின் மூலம், மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இதில், அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது, பிரபு தேவா. ‘இந்த படம் வெளியானதும், லட்சுமி மேனனின் மார்க்கெட், மீண்டும் சூடு பிடித்து விடும்’ என்கின்றனர், அவரது ரசிகர்கள்.