இலங்கையின் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்தை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர்.
சம்பவம் இடம்பெற்ற போது முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இந்த வளாகத்தில் இருந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாவலர்களில் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணமாக முன்னாள் அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கைது நடவடிக்கை மேற்கொள்ள தவறினால் காலவரையற்ற எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.