இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சர்கார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தை சன் குழுமம் தயாரித்து உள்ளது.
சர்கார் படத்தில் திரையுலக பிரபலங்களாலான வரலட்சுமி., யோகிபாபு மற்றும் ராதா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் டீசர் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும், அதனை இயக்குனர் முருகதாஸ் “சர்கார்” என்ற பெயரில் விஜயை வைத்து இயக்கியுள்ளதாகவும் வருண் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், செங்கோல் என்ற தலைப்பிலான தனது கதையை திருடி “சர்கார்” என்ற பெயரில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதால், இந்த படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, (25.10.2018) விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து தயாரிப்பாளர் மற்றும் தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கம் வரும் 30 ஆம் தேதிக்குள் (அக்.30) பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேரில் ஆஜரானார் . அப்போது சர்க்கார் படத்தின் கதை வருணுடையதுதான் என நீதிபதி முன்னிலையில் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக்கொண்டார். மேலும் கதையின் உரிமையாளரான வருணுடன் சமரசம் செய்துள்ளோம் எனவும் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.