இந்தோனேசியா விமான விபத்தில் இறந்த தாய்: வேதனையில் கதறி அழுத 14 வயது மகள்

இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் மகளிடம் அது குறித்து கூறப்பட்ட நிலையில் பள்ளிக்கூடத்திலேயே கதறி அழுதுள்ளார்.

நாட்டின் ஜகர்டா நகரிலிருந்து பிங்கல் பினாங்குக்கு 189 பேருடன் விமானம் கிளம்பிய நிலையில் 13வது நிமிடத்தில் மாயமானது.

இதையடுத்து விமானம் கடலில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தையும், உள்ளிருந்தவர்களின் சடலங்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விமானத்தில் பிபி ஜஜண்டோ என்ற பெண் பயணம் செய்துள்ளார்.

இதையடுத்து அவர் கடலில் மூழ்கிய விபரம் பள்ளிக்கூடத்தில் இருந்த அவரது மகள் கேஷியா (14) விடம் கூறப்பட்டது.

இதை கேட்டு கேஷியா கதறி அழுதார். பின்னர் ஒருவழியாக தன்னை தேற்றி கொண்டுள்ளார்.

சிறுமி கேஷியா கூறுகையில், என் அம்மா கடலில் மூழ்கிய செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

என்னை போல விமான விபத்தில் தங்களது சொந்தங்களை பறிகொடுத்தவர்கள் பலரும் அழுது கொண்டிருக்கிறார்கள்.

இந்த பாதிப்பு எனக்கு மட்டுமில்லை என்பதை புரிந்துகொண்டேன், இதனால் நான் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன்.

என் அம்மா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். இந்த விபத்து ஏன் நடந்தது என தெரியவில்லை என கூறியுள்ளார்.