தமிழக நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் ரூ.4,800 கோடி அளவுக்கு நடந்துள்ள முறைகேடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீ ஸார் வழக்கு பதிவு விசா ரணை நடத்தக் கோரி திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இது தொடர்பாக மனுதாரரான திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
தமிழக முதல்வர் தனது கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ் சாலைத் துறையில் 5 மிகப்பெரிய திட்டங்கள் மற்றும் 8 டெண்டர்கள் மூலம் 8 ஒப்பந்தங்களை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கி அதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளார் .
கடந்த ஜூன் 13-ம் தேதி முதல்வருக்கு எதிராக நான் அளித்த புகார் மீது அதே மாதம் 22-ம் தேதியே முதல்கட்ட விசா ரணை தொடங்கப்பட்டு விட் டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி வரைவு அறிக்கை கடந்த ஆக.28-ம் தேதி ஊழல் கண்காணிப்பு இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையே முதல் வரை காப்பாற்றும் வகையில் தான் உள்ளது.
முதல்வரின் கட்டுப் பாட்டில்தான் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை செயல்படுகிறது. முதல்வர் மட்டுமின்றி துணை முதல்வர், அமைச்சர்கள் விஜய பாஸ்கர், எஸ்.பி.வேலு மணி ஆகியோருக்கு எதிராக அளித்த புகார்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
எனவே, முதல்வருக்கு எதிரான புகார் தொடர்பாக அவரது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரித் தால் இதில் நியாயம் கிடைக்காது.
எனவே, முதல்வருக்கு எதிரான இந்த டெண்டர் முறைகேடுபுகார் தொடர்பாக எவ்வித குறுக்கீடும் இல்லாமல் தனியாக சிறப்பு புலனாய் வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தர விட வேண்டும். அத்துடன் இந்த விசாரணையை உயர் நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில்தான், தமிழகத்தின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வருவதாகத் தெரியவருகின்றது.