அரசியல்வாதியின் மகனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை..!

பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்தி மோட்டார்சைக்கிளில் மோதி, அதில் சென்றவருக்கு காயத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் ஊடக பேச்சாளரான கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமீத் பண்டார ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.சந்தேகநபரான ரமீத் ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால், இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நெரஞ்சன் ஈரியகொல்ல, சந்தேகநபருக்கு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

எனினும், அதற்கான மருத்துவச் சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என்பதால், நீதவான் சந்தேகநபரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளார்.