விருதுநகர் மாவட்டத்தில்., சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடியை சார்ந்தவர் திவாகரன் (26)., இவர் சரக்கு வேண் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சார்ந்தவருமான சுபாஷினி (19) என்பவரும் காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரின் காதல் உச்சமடைந்ததில்., சுபாஷினி கர்பமடைந்துள்ளார். இந்த விசயத்தினை கூறி தனது காதலனை திருமணம் செய்யும் படி திவாகரனிடம் கூறவே., திருமணத்திற்கு அவர் மறுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் செய்ததையடுத்து., திவாகரனை கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில்., கர்ப்பமுற்ற சுபாஷினி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் சிறையில் இருந்த திவாகரன் ஜாமினில் வெளிவரவே., சுபாஷினியிடம் சென்று தான் செய்தது தவறு என்றும்., அந்த தவறை திருத்திக்கொள்வதாகவும்., கூறினார்.
மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து., கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இருவரும் இருக்கன்குடி காவல் நிலையத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில்., திவாகரன் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று தகராறு செய்து வந்த நிலையில்., குழந்தையானது கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் விசாரணை நடத்திய போது., திவாகரனின் மீது சந்தேகம் எழுந்தது., இதனை தொடர்ந்து திவாகரன் மற்றும் அவரின் மனைவியான சுபாஷினியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., சுபாஷிணிதான் குழந்தையை கொலை செய்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து குழந்தையை கொன்ற சுபாஷினியையும்., அந்த சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த அவரின் கணவன் திவாகரனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.