திருமணமான 6 மாதத்தில் பன்றி காய்ச்சலால் பொலிஸ்காரர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான விஜய் என்பவர் பொலிசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக விஜய், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த மாதம் 26-ந் தேதி முதல் விடுமுறை எடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் காய்ச்சல் குணமாகாமல் தொடர்ந்து அதிகமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 29-ந் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜய், மருத்துவமனையில் பரிதாபமாக இறந் தார்.
விஜயின் உடலை பார்த்து அவரது மனைவி நர்மதா கதறி அழுதார். விஜய் இறந்த துக்கம் தாங்காமல் அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.