பிரித்தானியாவைச் சேர்ந்த 30 வயது பெண்மணி ஒருவர் தான் இதுவரை 20 ஆவிகளுடன் உறவு வைத்து கொண்டுள்ளதாகவும் ஆவியை மட்டுமே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தன் பேய் ஆசையை வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20 ஆவிகளுடன் தான் உடலுறவு கொண்டதாக இந்தப் பெண் கூறியதும் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் Amethyst Realm என்பவர் தன் எதிர்காலக் கணவருக்குத் தெரியாமல் 20 ஆவிகளுடன் தான் உறவு கொண்டதாகத் தெரிவித்தது பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் சந்தித்த ஆவியுடன் தான் விமானத்தில் உறவு கொண்டதாகவும்,
அவர் சமீபத்தில் தன்னிடம் பேசியதாகவும் அப்போது திருமண ஆசையை அந்த ஆவி வெளிப்படுத்தியது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் அமீதிஸ்ட் ரெல்ம் கூறியதில் பலரும் வெலவெலத்துப் போயுள்ளனர்.
பிரித்தானிய நாளேடு ஒன்றுக்கு அவர் கூறும்போது, இந்த ஆவிக்கு முழங்கால்கள் இல்லை, ஆனால் முதல் முறையாக அவர் என்னிடம் பேசினார், அவர் குரல் அழகானது, ஆழமானது, செக்சியானது என்று தெரிவித்த போது இவர் விளையாடுகிறாரா, சீரியஸகாப் பேசுகிறாரா என்ற குழப்பமே பலருக்கும் எஞ்சியுள்ளது.
இவர்களது இந்த உறவை குடும்பத்தினரும் நண்பர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனராம்.
இதனையடுத்து கிறித்துவ முறைப்படி அல்லாத பழங்குடி முறையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.
சாதாரண மனிதர்களை விட இவ்வகை ஆவிகளினுடனான தொடர்பு தனக்கு உண்மையான உற்சாகத்தை அளிப்பதாக அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.