கூட்டு வன்புணர்வுக்கு இரையாகும் பெண்கள்…

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் மனித உரிமை மீறல்களால் உலக நாடுகளின் பார்வையை கடந்த சில வாரங்களாக தம் பக்கம் திருப்பியுள்ளது.

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹோண்டுராசில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தப்பும் பொருட்டு தங்கள் உடமைகளை விட்டுவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

ஆணகளை கொத்தாக அள்ளிச்சென்று கொடூரமாக கொன்றொடுக்கின்றனர். பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்குகின்றனர்.

சிறார்களை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக கொத்தடிமையாக பயன்படுத்துகின்றனர். அமெரிக்க ஊடகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் அனைத்தும் கடந்த சில வாரங்களாக ஹோண்டுராஸ் மக்களின் கண்ணீரையும் கதறல்களையும் தங்களது கமெரா கண்களால் பதிவு செய்து வருகின்றனர்.

லட்சக் கணக்கான மக்கள் தங்கள் உயிரை காக்கும் பொருட்டு குடியிருப்புகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு கூட்டம் கூட்டமாக நாடுவிட்டு செல்கின்றனர்.

உணவும் தண்ணீரும் இன்றி பலர் பாதிவழியிலேயே உயிரை விட்டுள்ள சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியல் இன்று பதிவாகியுள்ள இந்த நாட்டில் தான் MS-13, 18th STREET GANG உள்ளிட்ட மிகக் கொடூரமான கொள்ளையர்கள் கூட்டமும் செயல்பட்டு வந்துள்ளது.

மத்திய அமெரிக்காவில் மிகவும் ஏழை நாடான ஹோண்டுராஸில் போதை மருந்து கும்பல்கள் பல செல்வாக்குடன் ஒருகாலத்தில் செயல்பட்டு வந்துள்ளனர்.

மேலும் மத்திய அமெரிக்காவுக்கான மொத்த போதை மருந்தும் ஹோண்டுராஸில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு அந்த நாட்டின் ஜனாதிபதி மானுவேல் செலயாவை ராணுவம் நாடுகடத்தியதை அடுத்து நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றியது.

போதை மருந்து கும்பல்களை அடியோடு துரத்திய ராணுவம், விசாரணை ஏதுமின்றி சந்தேக நபர்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றது.

ராணுவத்துடன் பொலிசாரும் கைகோர்த்த பின்னர் ஹோண்டுராஸ் நரகமாகவே மாறியது.

பொலிசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே விசாரிக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த அப்பாவி மக்கள் தெருக்களில் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகினர்.

இதனிடையே வேலைவாய்ப்பு குறைந்து பட்டினியும் பஞ்சமும் தலைவிரித்தாடியதனால் நாடுவிட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை பல மடங்கானது.

2013 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ் வெற்றிபெற்று ஜனாதிபதியானார்.

ஆனால் அவர் மீதும் ஊழர் புகார் எழுந்தது. இதனால் மீண்டும் கலவர பூமியானது ஹோண்டுராஸ்.

2017 ல் நடைபெற்ற தேர்தலில் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ் மீண்டும் வெற்றி பெற்றார் என்றாலும் நாட்டு அவரது கட்டுக்குள் இல்லை என்பதே அங்குள்ள தற்போதைய நிலை.