பெண்ணின் மரணத்திற்கான உரிய நீதியை உரியவர்கள் பெற்றுக்கொடுபார்களா?

யாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை! சாதி வெறியால் நேர்ந்த விபரீதம்.

யாழ்ப்பாணம் ஏழாலை மத்தி. சாடியடி, பகுதியைச் சேர்ந்தபரன் சுவர்னா (18 வயது ) எனும் இளம் பெண் தற்கொலை முயற்சி காரணமாக கடந்த 14.10.2018 யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார்.

இவர் காதல் தொடர்பு முறிந்த காரணத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தால், அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டும், கத்தியினால் தனது கரத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் .

சம்பவம் தொடர்பாக , குறித்த பரன் சுவர்னா என்ற பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரிபன் சுபாஸ் எனும் இளைஞனும் காதலித்து வந்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இருவரிற்கும் இடையில் சாதி வேறுபாடுகள் இருந்துள்ளதை காரணம் காட்டி பெண்ணின் தந்தை தனது மகளை எச்சரித்துள்ளார்.

இதேவேளை,இக்காதல் தொடர்பை விடுமாறும் தனது பெண்ணின் காதலனான ஸ்ரிபன் சுபாஸிற்கும் அறிவுரைகள் கூறியுள்ளார்.

இந்நிலையில் சுவர்னாவின் சந்திப்புக்களை ஸ்ரிபன் சுபாஸ் நிராகரித்து வந்ததாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் சுவர்னா கடந்த 14-10 2018 அன்று நச்சு திரவம் ஒன்றை அருந்திவிட்டு, தனது கையை கத்தியால் அறுத்து குருதி இழப்பை ஏற்படுத்தி இருந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி கடந்த 28-10-2018 அன்று மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காதலனை கைது செய்த பொலிசார் விசாரணையில் பொழுதுபோக்க தான் அவள் கிட்ட காதலிக்கிற மாதிரி பேசினான் என தெரிவித்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எது எவ்வாறாக இருப்பினும் சாதியை காரணம் காட்டி ஒரு பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

காதலிக்கும் போது தெரியாத சாதி திருமணம் எனும் போது தான் பலரிற்கு உறைக்கின்றது. இழப்புக்களையும் ஏமாற்றங்களையும் எல்லோராலும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்திற்கான உரிய நீதியை உரியவர்கள் பெற்றுக்கொடுபார்களா?