குமரி மாவட்டம் நாவல்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி, அவரது வீட்டுக்கு அருகிலுள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
தினமும் பள்ளிக்கு பேருந்தில் சென்று வரும் மாணவியை, புத்தேரி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய மாணவி,கடந்த 4 மாதங்களாக அவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், செவ்வாயன்று இறச்சகுளம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவியிடம், மருத்துவமனையில் உள்ள தனது அம்மாவை பார்க்க செல்லலாம் எனக் கூறி, இருசக்கர வாகனத்தில் மாணவியை அழைத்து சென்றுள்ளார்.
மாணவியிடம் கூறியபடி, மருத்துவமனைக்கு செல்லாமல், அருகுவிளையில் உள்ள நண்பன் வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்து, மாலையில் இறச்சகுளம் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்ற மாணவியிடம், பள்ளிக்கு செல்லாமல் எங்கு போனாய் என பெற்றோர் கேட்டபோது நடந்த சம்பவம் குறித்துபெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
கைதான இளைஞருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.