அணைந்து தானாக எரியும் தீபம்! அதிசயக் கோயில்!

நமக்கு தெரிந்த கோயில்களில் நமக்கே தெரியாத பல அதிசயங்கள் உள்ளது. அத்தவகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலில் நடக்கும் அதிசயத்தைப் பற்றி தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டம், தேப்பெருமாநல்லூரில் அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. குடந்தை நாகேஸ்வரம் திருக்கோயிலிலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூர் தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம். இந்த கோயில் 1000 – 2000 வருடங்களுக்கு மிக பழமையான கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவராக விஸ்வநாத சுவாமியும் வேதாந்த நாயகி அம்மனும் அருள்பாலித்து வருகின்றனர்.

அனைந்து தானாக எரியும் தீபம்:

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சன்னதியில் வேதாந்த நாயகி அம்பாள், பக்கதர்களுக்கு அருள்புரிகிறாள்.

அம்பாள் சன்னதியில் நான்கு வருடங்களுக்கு முன் தீபம் காலை 7 மணிமுதல் 9 மணி வரையில் அணைவதும் மீண்டும் தானாக எரியும் நிகைவு, காண்போரை ஆச்சரிய படவைத்தது.

தினமும் சூரிய பகவான் வழிபடுகிறார்:

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது பட செய்து வழிபடுகிறார். சூரிய பகவான் வணங்கிய, பின்தான் காலை ஏழு மணி அளவில் கோயில் திறக்கப்படுகிறது. சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது விழுவதற்கு ஏற்ப கிழக்கு வாசல் அமைக்கப்பட்டுள்ளது.