சென்னையில் உள்ள எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்தவர் காளிச்சாமி, இவர் தனக்கு பெண் தேடுவதற்காக பல இணைய தளங்களில் பதிவு செய்து வந்துள்ளார். ஒருநாள் இவருக்கு கடந்த அக்-24 ம் தேதி ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது. அதில் திருமணத்திற்கு பெண் தயாராக இருக்கிறது எனக்கூறி, தான் பெண்ணின் அத்தை என அந்தப்பெண் தொடர்பு கொண்டுள்ளார்.
பின்னர் நாங்கள் பெங்களுருவில் வசிப்பதாகவும், எங்கள் குடும்பத்திற்கு உங்களை பிடித்திருக்கிறது எனக்கூறி திருமண பெண் என்று ஒரு பெண்ணையும் அவரிடம் தொலைபேசியில் பேச வைத்துள்ளனர். இந்நிலையில் காளிச்சாமியும் அந்த பெண்ணிடம் அடிக்கடி பேசிய நிலையில் நேரில் சந்திக்க திட்டமிட்டனர்.
சென்னையில் உள்ள வடபழனி வளாகத்தில் சந்திப்பு நடந்தது. காளிச்சாமியிடம் தான் மணப்பெண் எனக்கூறி சாவித்ரி என்பவர் அறிமுகமானார். பின் அவர் என் உறவினர்களை சந்திக்க அழைத்த சாவித்ரி, சென்னையில் ஸ்டே என்ற விடுதியில் கூட்டிச்சென்றார்.
அந்த பெண் அழைத்த விடுதியின் அறையில் இரண்டு ஆண் நபர்கள் இருந்தனர். உடனே அவர்கள் இருவரும் காளிச்சாமியிடம் நங்கள் போலீஸ் என தெரிவித்து அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகக்கூறி மிரட்டி அவரிடம் இருந்த நகை, பணம் ஆகியவைகளை பறித்துவிட்டு காவல்நிலையம் வந்து வாங்கிச்செல் என்றுகூறிவிட்டு சென்றனர்.
பின்னர் காளிச்சாமி வடபழனி காவல்நிலையம் சென்று பார்த்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரிய, உடனே போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், விடுதிக்கு சென்று சிசிடிவி காட்சிகளை பாரத பின், போலீசார் உடனே எர்ணாகுளத்தில் தங்கி இருந்த அந்தப்பெண் சாவித்ரியையும், அந்த பெண்ணின் மகன் சிவா மற்றும் தங்கை மகன் கோகுலகிருஷ்ணன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அத்தை என தொடர்பு கொண்டதும் அந்த பெண்தான் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இவர்கள் போல் ஏமாற்றும் கூட்டம் பெரும்பாலும் இரண்டாவது திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களையே குறி வைப்பது தெரிய வந்துள்ளது.