முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சில மணி நேரத்துக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகைக்கு சென்று தந்தித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜப்க்ஷவின் விஷேட தூதுவராக அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின் போது, தம்மிடம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், ஜனாதிபதி தங்களை ஏமாற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவுக்கு உறுதி அளித்த போதும் அவர் அதனை நிறைவேற்ற தவறிவிட்டார் என மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய ரணிலுடனான கோட்டாவின் சந்திப்பு குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரணிலுக்கு கௌரவமான வெளியேற்றம் தொடர்பில் ஆலோசனை வழங்க சென்றாரா..?
அன்றேல் அச்சுறுத்தும் பாணியில் சென்றாரா..? அன்றேல் அரசியல் மாற்ற நடவடிக்கை பிசுபிசுத்துவிட்டது.
இதில் இருந்து மீள்வதற்கு ஒரு வழியை காட்டுங்கள் என்று கேட்க சென்றாரா..? என்ற வகையில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.