அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி முடித்து ஒரு மாதம் கூட ஆகல.. வெளியான வீடியோ.!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை தினகரன் ‘மைக் குமார்’ என்று விமர்சித்து இருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நான் மைக்குமார் அல்ல. மைக்டைசன். அவரை பற்றி தெரியும் அல்லவா..? ஒரே அடியில் நாக் அவுட் தான்.

எனக்கு பாக்ஸிங் தெரியும். இப்போது கூட தினகரனுடன் சண்டையிடும் அளவிற்கு எனக்கு வலிமை இருக்கிறது.

என்னால் அவரை வீழ்த்தி விட முடியும்’ என்று கூறினார். இதனை தொடர்ந்தே அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

எனக்கும் பாக்ஸிங் தெரியும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வாயால் தான் கூறினார். ஆனால் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் தனக்கு பாக்ஸிங்கே தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் உடன் அவர் சண்டையிடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

அதில் மேரி கோம் தாக்க முயற்படும் பொழுது அதனை இலகுவாக தடுப்பது போன்ற காட்சி அமைந்திருக்கிறது.